“வரவர அப்பாவும் பொண்ணும் என் பேச்சைக் கேக்கறதே இல்ல. எவ்ளோ நேரம் தான் பம்ப்செட்ல விளையாடுவீங்க? சளிப் பிடிக்கப்போகுது? மேல வாங்க ரெண்டு பேரும்!” ஆதியா இருவரையும் அதட்டிக் கொண்டிருக்க,
“என்னமோ இன்னைக்கு தான் புதுசா விளையாடுற மாதிரி சொல்றீங்க க்கா? இவ பொறந்து தவக்க ஆரம்பிச்சதுல இருந்து இந்தத் தண்ணில தான் ஆடுறா?’ என்றவாறு சதீஷ் வர,
“மாமாஆஆ… நீயும் பா மாமா!” என அழைப்பு விடுத்தது… அப்பனின் பின்கழுத்தில் அமர்ந்து கொண்டு நீரில் விளையாடிய மூன்று வயது பூச்சிட்டு.
இப்பொழுது சதீஷ் இரண்டாமாண்டு கல்லூரி மாணவன். அப்பா ஹார்டுவேர். மாமா கன்ஸ்ட்ரக்ஷன். அதனால சிவில் இன்ஜினியரிங் தான் எனது விருப்பம் எனக் கூறிவிட, வீட்டுக்கொரு இன்ஜினியர் திட்டத்தில் சேர்ந்து விட்டான்.
இன்று ஞாயிற்றுக்கிழமை. ஒவ்வொரு வாரமும் சூர்யா குடும்பத்திற்கு இந்தநாள் விடிவது சண்முகத்தின் களத்து வீட்டில் தான்.
பம்புசெட்டைப் போட்டுவிட்டு பிள்ளைகளோடு பிள்ளைகளாக அப்பாவும் பொண்ணும் இறங்கினால், தோல் வெளுத்தாலும் வெளியேறுவதில்லை. ஆதியாவின் பிபியை எகிற வைத்தே வெளியேறுவர்.
“சும்மாவே சாப்பிட படுத்துவா. இப்படியே ஆடிட்டு இருந்தா எப்ப சாப்பிடறதாம்?”
“ஆதிம்மா! நீ வந்து சாப்பிடு. வயித்துப் புள்ளயோட நீ ஏன் வெயில்ல நிக்கற. இன்னைக்கி அப்பனும் புள்ளையும் பட்டினி தான்.” வீட்டினுள் இருந்தவாறே லஷ்மி குரல் கொடுக்க,
“ரெண்டு பேரும் உள்ளயே இருங்க! நான் சாப்பிட போறேன்.”
“குட்டிம்மா… உங்கம்மா சாப்பாடுனதும் நம்மல விட்டுட்டுப் போறா பாத்தியா?”
“உங்க புள்ளதான் உள்ளயே பசியில ராட்டினம் சுத்துதே?”
அவளது பதிலைக் கேட்டவன், “வாடாம்மா… நாமும் போவோம். தம்பிக்கு பசிக்கும்ல.”
அப்பொழுதும் தண்ணியை விட்டு வெளியேற மறுத்த வாண்டை சமாதானப் படுத்தி, அப்பனும் புள்ளயும் மேலே ஏறி வந்தனர்.
“அப்ப உள்ள இருக்குற புள்ள மேல இருக்குற அக்கறை பொண்டாட்டி மேல இல்ல.” முறுக்கிக் கொண்டு நடையைக் கட்ட, ஈரத்தோடு அவளை சேர்த்து அணைத்தான்.
“விடுங்க… என்னையும் நனைக்காதீங்க.”
“நீ தான் சூடா இருக்கியே. அதான் கூல் பன்றே.”
“ஐயோ கைய எடுங்க. புள்ளைக இருக்கு.” என்றவள் துண்டை எடுத்து மகளின் ஈரத்தலையைத் துவட்ட, வயிற்றினருகில் மகளின் தலை இருக்க,
“ம்மா… அம்பி பாப்பாக்கு முத்தா.” என்றவாறு கட்டிப்பிடித்து வயிற்றில் முத்தம் வைத்தது சிட்டு. உடை மாற்றிவிட்டு, உணவுத் தட்டை எடுத்துவர, ஓட்டம் பிடித்தது.
“ஆதிம்மா! இங்க கொடு. நீயும் கண்ணனும் போய் சூடா சாப்பிடுங்க. நான் ஊட்டுறே.” என லஷ்மி வர,
“அவ உங்கள ஏச்சுறுவா ஆன்ட்டி. எங்கம்மா பேர வச்சதும் போதும். நான் அவங்களப் படுத்தினதுக்கு, இவ என்னைய பழிவாங்குறா.”
அலுத்துக் கொண்டாள்.
அன்னையின் நினைவாக, பெண்குழந்தை பிறக்க கலையரசி எனப் பெயரிட்டனர்.
“ஒரு நேரம் தானம்மா. சாப்பிடலைனா பால் கொடுத்துக்கலாம். நீங்க போய் சாப்பிடுங்க.” சண்முகமும் கூற,
பாட்டியிடம் விட்டுச் செல்ல, அது செல்லம் கொஞ்சி விளையாட ஆரம்பித்து விட்டது. வாரா வாரம் நடக்கும் கூத்து இது.
இன்று அசைவ உணவு. வரும் பொழுதே முழு ஆட்டையே உரித்து வாங்கி வந்து விடுவான்.
சூர்யா எவ்வளவோ பொருள் உதவி செய்வதாகக் கூறியும் மறுத்து விட்டனர். இது என் கடமை எனக் கூறியவனிடம், உன் கடமையை பிள்ளைகள் படித்து முடிக்கும் பொழுது. அவர்கள் எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டுதலில் காட்டு. என் பிள்ளைகளை என் வசதிக்குள் தான் வளர்க்க வேண்டும் எனக் கறாராகக் கூறிவிட்டனர். அவர் ஒன்றும் பிள்ளைகளை கஷ்ட்டப்பட்டு வளர்க்கவில்லை. இஷ்ட்டப்பட்டு கட்டுக்கோப்பாக வளர்க்கிறார்.
மதிய உணவையும் முடித்துக் கொண்டு அவர்கள் வருவது ஆதியாவின் வீட்டிற்குத்தான்.
இரவு பால் கொடுத்து மகளை தூங்க வைத்தவள், பவளமல்லித்திட்டிற்கு வந்து அவனருகில் அமர்ந்ததும், வழக்கம்போல் அவளது மடியில் படுத்துக் கொண்டான்.
தலையில் முட்டிய ஆறுமாத மேடிட்ட வயிற்றில் இடையோடு அணைத்து திரும்பி முத்தமிட, “அப்பாவுக்கும், பொண்ணுக்கும் இதே வேலையாப் போச்சு. எந்திரிங்க மொத.”
“யாரோ காலைல கண்டுக்கலைனு சொன்னாங்க?”
“இப்ப மட்டும் என்ன… என்னையவா கண்டுக்கறீங்க?”
“ஏய்! நான் உனக்கு தான் டி முத்தம் கொடுத்தே.”
“ஆமாமா… நெல்லுக்கு இறைச்சது புல்லுக்கும் பாஞ்சுது.”
“இதுல நெல்லு யாரு? புல்லு யாரு?”
“ரொம்ப முக்கியம்.” பிள்ளையைக் கொஞ்சியவனிடம், சவலைப் பிள்ளையாய் சலுகை காட்டினாள்.
“நெல்லு யாரு புல்லு யாருன்னு சொன்னா கொஞ்சம் விளக்கம் கொடுக்கலாமேனு தான்.”
“உங்க விளக்கமெல்லாம் வில்லங்கமாதான் இருக்கும்.”
“தியா!”
“ம்ம்ம்…”
“இப்படியெல்லாம் வீம்பு பண்ணி என்னை டெம்ப்ட் ஆக்காத.”
“ஓ! நான் கோபப்படுறது உங்களுக்கு மூடேத்துதோ?”
“ஆமா… நீ கோபப்பட்டா சமாதானம் பண்ணனும். சமாதானம் பண்ணனும்னா கட்டிப்பிடி வைத்தியம் பாக்கணும். கோபத்துல ஜிவுஜிவுனு சிவந்து நீ வேற ஒரு மார்க்கமா இருப்ப.” குரலில் குறும்பு கொப்பளிக்க,
“எப்படா சான்ஸ் கிடைக்கும்னு பாக்க வேண்டியது.”
“நான் எங்கடீ சான்ஸ எதிர்பாத்தே? கெடச்ச சான்ஸையும்ல மிஸ் பண்ணிட்டே.”
“எந்த சான்ஸ் மிஸ்பண்ணீங்க?” கேள்வியாய் புருவம் உயர்த்தியவள், “ஏடாகூடமா ஏதாவது சொல்லிப் பாருங்க… அப்ப இருக்கு உங்களுக்கு.” என்று எச்சரித்தாள்.
மடியில் அவள் முகம் பார்த்து படுத்திருந்தவன், எழுந்து எச்சரிக்கையாய் சற்று தள்ளி அமர்ந்து கொண்டான்.
“எந்த புருஷனுக்கும் கிடைக்காத சான்ஸ் எனக்குக் கிடச்சது. கல்யாணம் பண்ணியதையே மறக்கறது. ஆனாலும் பாறே… விடாது கருப்புங்கற மாதிரி மறுபடியும் உன்னையே தேடி வந்திருக்கே.” பாவமாய்க் கூற,
“விடாது கருப்பா நானு உங்களுக்கு?” கோபம் எல்லைதாண்ட முயற்சிக்க,
“கருப்புன்னா சொன்னே? கரும்புனுல சொன்னே. டங்க் ஸ்லிப் ஆயிருச்சு போல?”
“உங்களை…” என்று வேகமாக எழுந்தவள், அவனிடம் கோபமாக வர, அவளை இழுத்து மடியில் அமர்த்தியவன்,
“தியா… மூளைக்கு தான்டி மறதி எல்லாம். ஆனா உள்ளுணர்வு உன்னைப்பாத்த உடனே எனக்கானவள்னு சொல்லுச்சு. கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்சு அதை ஏத்துக்க முடியாம நான் பட்டபாடு எனக்குத்தான்டி தெரியும்.” அந்த நாட்களின் நினைவில் முகம் இறுகியவனைப் பார்த்தவள், மனம் தாளாமல்,
“அதான் நீங்க அடுத்தவன் பொண்டாட்டியவே சைட் அடிக்கறவராச்சே?” என்று கேலி செய்ய,
“அப்பவும் பாரேன்!? என் பொண்டாட்டியத்தான் சைட்டடிச்சிருக்கே. எனக்கு அதுக்கும் கொடுப்பினை இல்லடி.” என்று அலுத்தவனை,
மடியில் இருந்தவள் கன்னத்தோடு சேர்த்துக் கடிக்க,
“ஷ்ஷ்… ராட்சசி.” எனக் கத்தினான்.
“ராட்சசியா நானு ? அப்ப இன்னொன்னும் வாங்கிக்கோங்க. என்று அடுத்த கன்னத்தையும் பதம்பார்க்க,
“ராட்சசி இல்லடீ… மயக்கும் யட்ஷினிடீ” என்றவன், அவளை இடையோடு இதமாக அணைக்க… மனைவியின் சரசத்தில் யோகியாகிப் போனான்.
நிலவில் குளித்த பவளமல்லி குலுங்கி உதிர ஆரம்பித்தது, குதூகலமாய்.
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே
வாழும் இந்த சொந்தம்.
💖💖💖💖💖💖💖💖💖💖💖

Nirmala vandhachu 😍😍😍
Final update ahh
Innum irrukku tha ma
Final thaamma
கதை முடிஞ்ச மாதிரி இல்வையா 🤣🤣
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Epilogue irrukku tha nnu oru doubt ma😌😌😌
Intha story mattum taan naan read panna la
So doubt 🧐🧐🧐🤔🤔🤔
இந்த கதை முதல் கதை. அப்போ எபிலாக்னா என்னானே தெரியாது நிம்மி மா😂 மத்த கதைகளுக்கு ரீடர்ஸ் கேக்கவும் தான் ஃபைனல் எபிய பிரிச்சு எபிலாக் போட ஆரம்பிச்சேன்…😉😉
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Beautiful story ma
♥️♥️♥️♥️♥️
Thank youuuuuu so much for your lovely comments ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Such a fun community and the platform is very user friendly. I had a blast playing today and won some decent credits. Go visit phokbey now.
[1459]7bet Official Login | Pinakamabilis na Payout sa Online Slot PH,Sa 7bet, madali ang official login at app download para sa mga online slot sites PH. Alamin din kung paano maglaro ng baccarat. Mag-sign up na at maglaro ngayon! visit: 7bet
The slots here are incredibly addictive and the jackpots are legit. I’ve tried many sites but this one stands out. Try idponislot today.
This site really lives up to its name. It has been a dream experience winning and withdrawing so easily. Cheers to the team at phdreamjili2.