தெம்மாங்கு பூந்தமிழே 26

முன்தினம் தான் வேண்டுதல் முடித்து வீடு திரும்பியிருந்தனர். குழந்தைக்கான வேண்டுதல் என்பதால் பிள்ளையோடே பூக்குழி இறங்கிவந்தாள். நம்மை மிஞ்சிய சக்தி ஏதோ ஒன்று உண்டு என நம்பவைப்பது இம்மாதிரி சில தருணங்கள்தான். அவன் பயந்த மாதிரி எதுவும் ஆகாமல் நல்லபடியாக வேண்டுதல் முடிந்தது.

வீடு திரும்ப இரவாகிவிட்டது. இரவு உணவை முடித்துக் கொண்டு, பிள்ளையை தூங்க வைக்க வந்தவள் அலுப்பில் அவளும் கண் அசந்துவிட்டாள். சற்று நேரத்தில் காலில் ஏதோ வருடுவதுபோல் இருக்க சட்டென்று எழுந்து அமர்ந்தாள். காலடியில் அமர்ந்து அவளது காலில் காயம் ஏதும் இருக்கிறதாவென ஆராய்ந்து கொண்டிருந்தான். 

“எதுவும் ஆகல மாமா” எனக் கூற, இரண்டு பாதங்களையும் ஒருசேர எடுத்து உள்ளங்காலில் அழுந்த முத்தம் வைக்க, சூடாக கண்ணீர் பாதத்தை நனைத்தது. 

“மாமா…” என அழைக்க நிமிர்ந்து பார்த்தான். இரு கைகளையும் விரித்து தலையசைத்து கண்களால் பெண்ணவள் அழைக்க, தாவி அணைத்துக் கொண்டவன், பெண்ணவள் முகம் முழுதும் தவிப்போடு முத்தத்தால் ஒற்றியெடுக்க, அவனை அணைத்து ஆற்றுப்படுத்தினாள். இன்று முழுவதும் அவனது பதட்டத்தை கவனித்துக் கொண்டுதானே இருந்தாள். இத்தனை நாட்களாக பிள்ளைக்காக இவள் விரதமிருக்க, அவளுக்காக அவனும் தானே விரதம் இருந்தான். அவளை விலக்கிவிட்டு எழுந்தவன், “நீ தூங்கு அமிர்தா. நான் மாடிக்குப் போறேன்” என எழுந்து கொள்ள, அவள் கேள்வியாகப் பார்த்தாள். 

“ஏற்கனவே டயர்டா இருக்க. நான் இங்க படுத்தா என் கைகால் சும்மா இருக்காது. இன்னைக்கு மட்டும் ரெஸ்ட் எடுத்துக்கோ” எனக் கன்னம் தட்டி சிரித்துவிட்டு வெளியேற, 

“கைகால் மட்டும் தானே மாமா. பரவாயில்ல இங்கேயே படுங்க” என எகத்தாளம் எக்களிப்பு செய்ய, 

“ஏத்தம் தான்டி உனக்கு. இந்த வாய்ச்சவடால் எல்லாம் நாளைக்கு என்ன பண்ணுதுனு பாக்கலாம். சீண்டாம தூங்குடி குந்தானி” என அவள் காலுக்கு வைத்திருந்த சிறு குஷனை எடுத்து அவள்மீது எரிந்துவிட்டு வெளியேற, புன்னகை மாறாமல் அவன் வெளியேறும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். 

“பாத்தது போதும். படுத்துத் தூங்கு அமிர்தா” என திரும்பியே பார்க்காமல் சொல்லிச்செல்ல வாய்விட்டு சிரித்தாள்.

*******

”ப்ளீஸ் மாமா… தள்ளிப்போங்க.”

“ம்ம்கூம்.” 

“என்ன… இன்னைக்கி கருவாட்டுப் பானைய பூனை சுத்துனமாதிரி அடுப்படியவே சுத்தி வர்றீங்க?”

“ஏன்டி, உதாரணம் கூட உனக்கு மீனு, கருவாடுன்னு கவிச்சியா தான் வருமா. இந்த பூவ வண்டு சுத்துன மாதிரினு ரசனையா வராதா?”

“புலி பசிச்சாலும் புல்ல திங்காது மாமா.”

“ஆனா, புலி பசிக்கலைனா புல்லு தான் திங்கும். அது தெரியுமா உனக்கு?” என வியாக்யானம் பேச,

“இப்ப காஃபி போடவா வேண்டாமா?” என சிடுசிடுத்தாள்.

“போடு” என்றவன் கரங்கள் பெண்ணவள் இடையைச் சுற்றிவளைத்திருக்க, தாவாய் தோள்பட்டையில் குத்திட்டிருந்தது. 

“இப்படி நீங்க நின்னா காஃபி, காஃபி மாதிரி இருக்காது. கழனித்தண்ணி மாதிரிதான் இருக்கும்.”

“அப்ப இத்தன நாளா நீ கொடுத்தது கழனித்தண்ணி இல்லியா, காபியா?”

“எனக்கு தேவை தான். காலையில காபி மட்டுமாவது போட்டுக் கொடுக்கலாமேன்னு நெனச்சேன் பாருங்க. என்னச்சொல்லணும். நாளையிலிருந்து ஹோட்டல்ல போயே குடிச்சுக்கோங்க.” 

“ஏன், நாளையில இருந்து வெள்ளனா எந்திரிக்க முடியாதுங்கறியா?” 

“மாமா… இப்படியே பேசுனீங்கனா விரதத்த கன்டினியூ பண்ணிருவேன்.”

”அதையும் தான் பாக்கலாமே” என்றவன் பிடி இடையில் அழுத்த, உதடுகள் பெண்ணவள் பின்கழுத்தில் எறும்பாய் ஊர்வலம் போக ஆரம்பித்தது. ஆற்றிக் கொண்டிருந்த டம்ளரை, டக்கென சமையல் மேடையில் வைத்துவிட்டு, வேகமாக முன்னால் திரும்ப, இன்னும் அது அவனுக்கு வசதியாய்ப் போயிற்று. தடைபட்ட வேலையை கழுத்தில் தொடங்கி, கன்னம் தொட்டு, இதழுக்கு முன்னேற, கைவைத்து தடுத்தாள். 

“ஏன்டி, பிடிக்கலியா?” என்றான் இடையோடு இறுக்கி அணைத்தபடியே.

“ம்ம்கூம், ஒரு மாதிரியாயிருக்கு மாமா.” குரல் கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் வர,

“பயமா இருக்காடி?” வாஞ்சையாய்க் கேட்க, இடவலமாக தலையசைத்தாள் பெண்.

“ம்ம்கூம். அது எப்படி சொல்றதுனு தெரியல. நீங்க கிட்ட வந்தாலே…”

“கிட்ட வந்தாலே…‌”

“ராட்டினத்துல சுத்தி கீழ வரும் போது ஜிவ்வுனு அடி வயிறு இழுக்குமே அப்படியிருக்கு மாமா” என ஒருவித தாபக்குரலில், அவளது உணர்வுகளை வார்த்தைகளாலே அவனுக்குக் கடத்தியவள் முகம் நாணத்தில் செந்தனலாய் தகிக்க… அவனுக்குள் கிளர்ந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் வழியறியாது, சட்டென கன்னம் தாங்கி இதழணைத்தவன் அவளை சிலகணங்கள் ராட்டினத்தின் உச்சியில் நிறுத்தியிருந்தான். 

திடீர் முற்றுகையில் திக்குமுக்காடிப் போனாள் பேதை. பிடிமானத்திற்கு மேடையை  இறுகப் பற்றியவள், தன்வசம் இழந்து மூச்சுக்காற்றுக்கு தவிக்க, விட்டுவிலகியவன், இன்னும் கண்கள் மூடி கிறங்கி நின்றவள் கன்னம் தட்டி, “ராத்திரி விருந்துக்கு தயாராகிக்க. இன்னையோட விரதத்த முடிச்சுக்கலாம்” என்று திரும்பி நடக்க, தனை மறந்து நின்றவள், சட்டென நினைவு வந்தவளாக…

“மாமா காஃபி” என அழைக்க,

“வேண்டாம், இந்த டேஸ்ட் போயிரும்” என  கண்சிமிட்டிச் சொல்ல. 

ஒருகை கொண்டு கண்ணை மூடிக்கொண்டு அழகாக வெட்கப்பட்டவளை கண் நிறைத்துச் சென்றான் கண்ணாளன். 

கேசவமூர்த்தியின் அறைக்கு வந்தவன், வழக்கம்போல் அவர் குளிக்க உதவி செய்து உடைமாற்றி வெளியே அழைத்து வந்தான். 

மஞ்சுளாதேவி எழுந்து வர, பிள்ளைக்கு பால் ஆற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாக தடைபட்டிருந்த ஃபிசியோதெரபி பயிற்சியை இன்று கேசவமூர்த்திக்கு தொடங்கப்பட்டது. வழக்கம் போல் பிள்ளையோடும், ஃபோனில் தோழியோடும் பொழுது கழிந்தது. 

இரவு வீடு திரும்பினான்.‌ மகளோடு கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தாள் அமிர்தா.

“என்னடி, குட்டிம்மா இன்னும் தூங்கலியா?” என்றான் ஏமாற்றமாக.

 “இப்ப தான் மாமா எழுந்தா. தூங்க லேட்டாகும். நீங்க போய் குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம்” என்றவள் குழந்தையின் கைபிடித்து விளையாட்டுக்காமிக்க,

“இது சோறு, குழம்பு, ரசம், தயிர், வெஞ்சனம் என ஒவ்வொரு விரலாகப் பிரித்துச் சொல்லி, எல்லாத்தையும் உள்ளங்கையில் பிசைஞ்சு அப்பாவுக்கு ஒரு வாய், அம்மாவுக்கு ஒரு வாய், பாப்பாவுக்கு ஒரு வாய், அத்தைக்கு ஒரு வாய் என ஒவ்வொன்றாகச் சொல்லி ஊட்ட, இறுதியில் கழுவிக்கழுவி நாய்க்கு ஊத்து என முடித்து, நண்டு ஊருது நரி ஊருது என கைவிரல் கொண்டு பிள்ளையின் கையில் ஊர்வலம் வர பிள்ளை கழுத்தைச் சுருக்கி கூசி கலகலத்துச் சிரித்தது. புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவன்,

“குட்டிம்மா… இப்ப அம்மாவுக்கு இது மாதிரி விளையாடலாமா?” என கேட்க அப்பனின் சூது தெரியாமல் வேகமாகத் தலையாட்டியது பிள்ளை. 

பிள்ளையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டான். எதிரில் அமர்ந்திருந்தவள் கைபிடித்து, பிள்ளைக்குச் செய்தது போல் அவளுக்கும் சொல்லிமுடித்து, அவளது கையின் மீது தன் இருவிரல் கொண்டு உள்ளங்கையிலிருந்து நண்டு ஊருது, நரி ஊருது என சொல்லிக் கொண்டே மெள்ள ஊர்வலத்தைத் தொடங்கினான். ஆட்காட்டி விரலும், நடுவிரலும் அவளது கரத்தில் அங்குலம் அங்குலமாக ஊர்வலம் வர, அவளது பார்வை முழுதும் அவன் விரல் மீதே. அவனது பார்வை முழுவதும் பாவை முகத்திலே. காதோரம் பூனை முடிகள் சிலிர்த்து நிற்க, மெள்ள மெள்ள அவளது பால்நிற மேனி பவளநிறம் கொள்வதைக் காண்டவனுக்கும் கொதிநிலை கண்டது உடல்நிலை. பையப் பைய அவளது மூச்சுக்காற்று தடுமாற, இதயதாளம் சுதிதப்ப, அவனது கைவிரல், இவளது கைதாண்டி தோள்மீது ஏறி கழுத்தை நோக்கி கீழிறங்கிவர, பட்டென கைகளை உருவிக் கொண்டாள். புருவத்தை மட்டும் உயர்த்தி கண்சிமிட்டி என்னவென சமிஞ்கையில் கள்ளச்சிரப்புடன் கேட்க, 

“சாப்பிட வாங்க மாமா” என எழுந்து கொண்டவள், பிள்ளையை வாங்கிக் கொண்டு வேகமாக வெளியேற வாய்விட்டுச் சிரித்தான். திரும்பிப் பார்த்து உதடுசுழித்து கொக்காணி காமித்துச்சென்றாள். 

அவன் குளித்து விட்டு வருவதற்குள் சாப்பாட்டு மேஜையின் மீது எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, படுக்கையறை திரும்ப, 

“யாரோ பரிமார்றதா சொன்னதா ஞாபகம்…” என இழுத்தான். 

“அதெல்லாம் நீங்களே போட்டு சாப்ட்டுக்கோங்க. பிள்ளைய தூங்க வைக்கணும்” என வேகமாக நகர்ந்துவிட்டாள். 

பிள்ளையைத் தன் மீது போட்டு தட்டிக் கொடுக்க, இன்னும் அவனது விரல்கள் அவளது கரம் தாண்டி கழுத்தில் ஊர்வலம் நடத்தும் உணர்வு. மேனியெங்கும் பட்டாம்பூச்சியின் பரபரப்பு கொள்ள, கால்கள் பிண்ணிக் கொண்டன. சற்று நேரத்தில் பிள்ளை தூங்கிவிட, மெதுவாக பக்கத்தில் சரித்துவிட்டாள். 

கதவு திறக்கும் சப்தத்தை எதிர்பார்த்து, மனம் காத்துக்கிடக்க, இதோ அதோ என உள்ளுக்குள் தடதடத்தது. கதவு திறந்தபாட்டைக் காணோம். 

நள்ளிரவு நெருங்கும் நேரம். கதவு மெதுவாகத் திறக்கும் சப்தம் கேட்டு நிசப்தத்தில் சட்டென உடல் உலுக்கியது. காலடி ஓசை நெருங்க, இதயம் படபடக்க,  தூங்கும் பாவனையில் கண்களை இறுக மூடிக்கொண்டாள்‌. பிள்ளை மீதிருந்த கையை எடுத்துவிட, அப்பொழுதும் அவளிடம் அசைவில்லை. மெதுவாக இடையிலும், கழுத்திலும் கைகொடுத்துத் தூக்க, 

“மாமா… என்ன பண்றீங்க?” என்றாள் பதறிப்போய் கிசுகிசுப்பான குரலில்.

“ஷ்ஷ்ஷ்… சத்தம் போடாதடி. குட்டிம்மா எந்திரிச்சுக்கப் போறா?” என்றான் அவனும் அதே தொனியில்.

“முதல்ல இறக்கி விடுங்க.”

“காலையிலேயே என்னடி சொன்னே. கும்பகர்ணி மாதிரி தூங்கிட்டு இருக்க? நேத்தே பாவம் பாத்து விட்டுருக்கக்கூடாது.”

“அதுக்குனு தூங்குறவள இப்படித்தான் தூக்கிட்டுப் போவீங்களா?”

“நீதான் தூங்கலியே. தூங்குற மாதிரி தானே நடிச்ச.”

“கண்டுபிடுச்சுட்டீங்களா?”

“ஆமா இது பெரிய சிதம்பர ரகசியம் பாரு.”

“கீழ போட்டுறாதீங்க மாமா” என இப்பொழுது வாகாக கழுத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

“ஆமாடி குந்தானி, இந்தக் கணம் கணக்குற. இந்த சினிமாவுல எல்லாம் எப்படித் தூக்கிட்டு டான்ஸ் வேற ஆடுறாங்க?” என்றவன் கைகளில் ஏந்திக்கொண்டு வெளியே வர,

“இந்த ஆராய்ச்சி இப்ப ரொம்ப முக்கியம் பாருங்க?” என நொடித்தாள்.

“அதுவும் சரிதான். நம்ம பண்ண வேண்டிய ஆராய்ச்சி வேறயாச்சே” என்றவன் மாடிப்படி வர, அவளை கீழே இறக்கிவிட்டு, இடுப்பை இடவலமாக நெளித்து நெட்டிமுறிக்க, 

“காதலிக்கும் போது, வானத்தையே வில்லா வளைப்பேன், நிலாவுல குடிவைப்பேன், மலையையே புரட்டுவேன்னு ஆம்பளைங்க வீரவசனம் பேசறதெல்லாம் பொய்யா கோபால்” என பெண்ணவள் பிதற்ற,

“மலையப் புரட்டலாம்டி. ஆனா தூக்க முடியாது” எனக் கூறி அவனும் சிரிக்க,

“மாமா…” என காலை தரையில் உதைத்து சினுங்கினாள்.

“பாத்துடி, அந்தக்காலத்து வீடு.”

“போங்க, இன்னைக்கும் நான் விரதம்” என முறுக்கிக்கொண்டு திரும்ப, “சும்மாடி… என் அல்லிராணி இப்படி இருந்தாதான் அழகு” என தாவாய் பிடித்து, கொஞ்சியவன்… “ஆமா கொலுசெங்க?” என கேட்க, சங்கோஜமாக நகம் கடித்தாள். 

“என்னடி?”

“இல்ல… அதுவந்து… கீழ அந்த ரூம்ல தான‌ இருப்போம். அதனால சத்தம் கேட்டு குட்டிம்மா எழுந்துப்பாளேனு கழட்டி வச்சுட்டேன் மாமா” எனக்கூறியவளை இழுத்து கட்டிக்கொள்ளத் தோன்றியது. அந்த அறையிருட்டிலும் மனைவியின் முகத்தை வாஞ்சையோடு ஆசைபொங்கப் பார்த்து வைத்தான். இதற்காகத்தானே அவளைத் தனியே தூக்கி வந்ததும். என்னதான் குழந்தைதான் என்றாலும் முதல்முறை எனும் பொழுது ஒரு பெண்ணாக அவளுக்கும் சங்கோஜமாக இருக்கும், கவனம் முழுதும் குழந்தை பக்கம் சென்று விடும் என்று எண்ணியே அவளுக்கான தனிமையைக் கொடுக்க விரும்பினான்.

”நான் போயி போட்டு வரவா?”

“நாளைக்கு போட்டுக்கோ. ஆனா இனிமே கழட்டாதே.”

“ம்ம்ம்… இப்ப எப்படி. மறுபடியும் தூக்குறிங்களா. இல்ல…” என இழுக்க,

“ரிஸ்க் எடுக்க விரும்பலடி. இன்னைக்கி ரொம்ப வேல இருக்கு. நீயே ஏறி வந்துறு” என்றவன் அவளுக்கு முன் வேகமாகப் படியேற,

 “உங்கள” எனத் துரத்த ஆரம்பிக்க, இரண்டிரண்டு படியாகத் தாவி ஏறி வேகமாக அறைக்குள் சென்றான். பின்னால் விரட்டி வந்தவள் அவன் முன் இடுப்பில் கைவைத்து மூச்சிறைக்க நின்றாள். 

“இதுவும் நல்லா தான்டி இருக்கு” என்றவன் பார்வை போனபோக்கைப் பார்த்தவள் முறைத்துத் திரும்பிக் கொள்ள,

சட்டென அறையின் மாற்றம் உணர, பார்வையைச் சுழற்றினாள். அறையில் ஏற்றியிருந்த வாசனை மெழுகுவர்த்தியின் மணம் மயக்குவதாக இருக்க, அதன் மெல்லிய வெளிச்சத்தில் மனமும் மயங்கியது. கட்டிலின் மீது கல்யாண ஜமுக்காளம் விரித்து, அதன் மேல் மல்லி, சம்பங்கி, மரிக்கொழுந்து, ஜாதி மல்லி என ஒவ்வொரு அடுக்காக ரோஜா இதழ் கொண்ட இதய வடிவத்தினுள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புன்னகை விரிய பார்த்தவளை பின்னாலிருந்து இடையோடு அணைத்தவன், 

“பிடிச்சுருக்கா?” என கேட்க,

“இவ்ளோ நேரமா இதத்தான் பண்ணீங்களா? அழகாயிருக்கு மாமா. ஆனா கலஞ்சுறுமே” என வருத்தப்பட,

“சில விஷயங்கள கலச்சுப் பாத்தாதான்டி அழகு” என காதோரம் கிசுகிசுக்க, அருவியின் பேரிரைச்சல் பெண்ணிற்குள்.  

அவளுக்குப் பிடித்த மல்லி கதம்பத்தை சரமாக தலையில் சூட்டியவன், முகம் புதைத்து வாசனை பிடிக்க, பெண்ணவள் அடுப்பில் வைத்து உலையெனக் கொதிக்க ஆரம்பித்திருந்தாள். மெல்லிய அதிர்வு அவள் உடலெங்கும் ஓடுவதை உணர்ந்தவன், அவளை கைகளில் அள்ளிக் கொண்டான். 

நான் பூவெடுத்து

 நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால

அதை வைக்கிறப்ப சொக்கணும் தன்னால

அத்தமவன் சொன்னத ஒத்துக்கணும்

சரிதான் சரிதான்

அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்

சுகம் தான் சுகம் தான்..

தென்பழநி சந்தனம் தான் இங்கு ஒரு பெண்ணாச்சா

என்னென்னவோ எண்ணம் தான் என்னக் கண்டு உண்டாச்சா

ஒ முந்தானைய இழுகட்டுமா

சும்மா இரு

ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா

கொஞ்சம் பொறு

அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹேய்…

“அல்லிராணிக்கு மாமன்கிட்ட என்னடி பயம். இப்படி நடுங்குற. வேண்டாம்னா சொல்லிறு” 

“இப்ப… வேண்டாம்னா என்ன பண்ணுவீங்க மாமா” கேட்டவள் குரலில் கள்ளத்தனம் கபடி ஆடியது.

“பொண்ணுக பேச்சுக்கு வேண்டாம்னா வேணும்னா தானே அர்த்தம்.”

“கேடி மாமா.” கொஞ்சியது வஞ்சியின் குரல்.

“இன்னைக்கு நமக்குள்ள ஒரு டாஸ்க்” என்றவன் பேச்சில் வில்லங்கம் விவகாரம் கூட்டியது.

“ஜமுக்காளத்த விட்டு யார் வெளிய போனாலும் மீண்டும் ஆட்டம் முதலிலிருந்து தொடங்கப்படும்” எனக் கூற வாய்விட்டு சிரித்தாள்.

”மாமா… இதென்ன கபடியா?”

“கிட்டத்தட்ட ரெண்டும் ஒன்னுதான்டி. மூச்சுப்பிடிச்சு ஆடணும்” என கட்டிலில், பூவையைக் கிடத்தியவன் தனது ஆட்டத்தை மெதுவாக எல்லைக்கோட்டைத் தொட்டு  முத்தமிட்டு முன்னேறினான்.

முதல் முத்தம் பட்டும் படாமல் கன்னம் உரசி முகவுரை முத்தம்.(நிமிதக)

இரண்டாம் முத்தம் குளக்கரை உரசும் அலையாய் தொட்டும் பட்டும் உதடு மட்டும் உரசும் முத்தம் (ஸ்புரிதக)

வெட்கம் விட்டு இதழ்கள் இணையும் மூன்றாம் முத்தம் (கட்டிதக)

முகம் முகம் எதிரெதிராய், கீழுதடும் மேலிதடும் மாறி இணைவது நான்காம் வகை முத்தம் (சமகம்பன்)

ஒருவர் மீது ஒருவர் ஒடிந்து விழுந்து வளைந்து தருவது ஐந்தாம் வகை முத்தம் (வக்கிர கம்பன்)

முகம் திருப்பி முகவாய் ஏந்தி இடவலம் அசைந்து இடுகின்ற முத்தம் ஆறாம் வகை (ஜபிரை கம்பன்)

இதழ்களை பூப்போல் திறந்து நாவுகள் இணையும் முத்தம் ஏழாம் வகை (அவ பிடி)

இதழ்களை பந்துபோல் விரல்களால் உருட்டி தேனெடுக்கும் வைபவமே மிக அழுத்த முத்தம் (அக்ரிஷ்ட) [உபயம்: கவிஞர் பா.விஜய். உடைந்த நிலாக்கள். தாட் மீன்ஸ் திஸ் இஸ் சுட்ட பழம்]

மொத்த முத்தத்தையும் மொத்தமாக, காமன் கணைகளாகப் பிரயோகித்து முத்தத்தாலேயே பேதைக்கு பித்தம் ஏற்றினான். ஒவ்வொரு முத்தமாக இட்டு ஓசைகூட்டினான். ஓசைகளை ஒன்று கூட்டி எழுத்தாக்கினான். எழுத்துக்களை ஒன்று சேர்த்து வார்த்தையாக்கினான். வார்த்தைகளை ஒன்று கூட்டி காதலெனும் சிவப்பு மையூற்றி காமம் எனும் நீலக்கவிதை புனைந்தான். முத்தச்சாவி கொண்டு நாணப்பூட்டைத் திறந்தவன் புதையல் கண்டு மூர்ச்சையாக, கண்கள் செருக தன் நிலை இழந்தவளை முழுதுமாக தன்வசப்படுத்தினான். பள்ளி சென்ற அனுபவத்தில் தடுமாற்றமின்றி பாலபாடம் கற்பித்தவன், பசித்து உண்ணும் ருசியறிந்தான். 

களைத்தான்… எடுத்தான்… ருசித்தான்… பெண்ணின் குறிப்பறிந்து சேவைகள் செய்யும் சேவகனாக, மன்னவன் பசியறிந்து மனம் கோணாமல் பந்தி வைத்தாள் பாவையும். போதுமென்று சொல்ல வயிற்றுப்பசியா என்ன. அடங்க மறுக்கும் வாலிபப்பசி. அது உண்டபின் தான் மயக்கம். இது உண்ணும் தோறும் மயக்கம். அவளில் மயங்கியவன், அவளையும் மயங்க வைத்தான். மயங்கியவளை மிதக்க வைத்தான். மிதந்தவளை சட்டென அந்தரத்தில் நிலைகொள்ள வைக்க, காதடைத்து கண்கள் இருள “மாமாஆ…” என்றவளின் அடித்தொண்டை அரற்றலை இதழ் கொண்டு பூட்ட, பல்தடம் பரிசளித்தாள் பெண்.  

 உயிர் முன் உயிர் வரின் ’உ’ குறில் மெய்விட்டோடும் என்பது தமிழ் இலக்கணத்தில் எழுத்துக்களின் புணர்ச்சி விதி.

மெய்யோடு மெய் சேரின் மெய்விட்டு உடுக்கை (உடை) களையும், நாணம் கெடும், ஆண்பெண் நிலை திரியும், உயிர் தோன்றும் என்பது கூடலில் புணர்ச்சி விதி.

மோட்சம் பெற மரணிக்க வேண்டும். முக்தி பெற ஆண்டாண்டு காலம் தவமியற்றி வெண்டும். மோட்சமும் முக்தியும் ஒரு‌சேரப்பெற காதலோடு காமம் வேண்டும். இந்த மோட்சத்திற்காக எத்தனைமுறை வேண்டுமானாலும் இறக்கலாம். எத்தனை ஆண்டு வேண்டுமானாலும் தவமியற்றலாம். காதலற்ற காமம் குடத்துநீர்; தாகம் தீர்க்கும். காதலோடு காமம் இறைக்க இறைக்க ஊறும் மணற்கேணி. சுவையும் அதிகம். 

‘அறிதோறும்‌ அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிலை மாற்று’ என்பது வள்ளுவன் வாக்கு. எத்தனை முறை ஆராய்ந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு‌ புதுமை காட்டும் பதுமையிடம் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தான். விடியும்வரை மஞ்சத்தில் மையம் கொண்டிருந்தது இளமைப்புயல். வலுவிழக்கும் அறிகுறியின்றி…

கதிரவனே கண் சிவந்து எட்டிப் பார்க்க, அப்பொழுதுதான் இவர்கள் கண் அடைந்தது. 

*****************

“அமிர்தா… குட்டிம்மாவ என்கிட்ட கொடு. நீ போய் பிள்ளைய பசியமத்து.”

“இல்ல மாமா இன்னும் ரெண்டு வாய்தான். ஊட்டிட்டு வந்துர்றேன். நீங்க அவனக் கொஞ்சம் தட்டிக் கொடுங்க.”

“அழரான்டி… நான் குட்டிம்மாவப் பாக்குறேன்‌. நீ முதல்ல இவனப்பாரு” எனக்கூற, அவனை முறைத்துவிட்டு ஊட்டி முடித்துவிட்டே வந்தாள். அதற்குள் ஆறுமாதக் குழந்தை வீரிட ஆரம்பிக்க, ஆதினிக்கு வாயைத்துடைத்துவிட்டு, தண்ணீர் குடிக்கக் கொடுத்துகொண்டே, 

“குட்டிம்மா… தம்பிக்கும் பசிக்குதாம். புவ்வா கொடுக்கலாமா? நீங்க அப்பாகிட்ட போறீங்களா? எனக் கேட்க,

“சதிம்மா… நீங்க அம்பி பாப்பாக்கு புவ்வா கொதுங்க” என்றது பிள்ளை கிள்ளை மொழியில். குழந்தையை வாங்கிக் கொண்டு அறைக்குள் சென்று பசியமர்த்தி வந்தாள். 

“அவளக் கவனிக்கும் போது, குழந்தைதான்  முக்கியம்ங்கற மாதிரி அவமுன்னாடி பேசாதீங்க மாமா. பிள்ள பொக்குனு போயிருவா” என தனிமையில் கணவனைக் கடிய, 

“இவன் கத்தும் போது என்னடி பண்ணச் சொன்ன. அவளுக்கு நான் ஊட்ட முடியும். இதுக்கு முன்னாடி ஊட்டினதில்லையா?”

“முன்ன மாதிரி இல்ல மாமா. அப்ப அவ ஒருத்தி மட்டும் தான். யார் ஊட்டினாலும் சாப்பிடுவா. இப்ப தம்பியும் கூட இருக்கும் போது யாருக்கு முதல்ல அட்டென்ஷன் போகுதுன்னு குழந்தைக கவனிக்குங்க. என்னதான் நம்ம தம்பினு தெரிஞ்சாலும், இத்தனை நாளா எல்லாரும் அவளமட்டும் தான் கொஞ்சுனோம். இப்ப அவ முன்னாடியே இவனையும் எல்லாரும் கொஞ்சும் போது குழந்தைகளுக்கு பொசசிவ்னஸ் வரத்தான் செய்யும். அவளுக்கா விபரம் தெரிஞ்சு பின்னாடிதான் விட்டுக் கொடுக்க ஆரம்பிப்பாங்க. அவ முன்னாடியே வந்து இவன முதல்ல கவனின்னு சொன்னா அவ என்ன நினைப்பா” எனக் கேட்டவளை புன்னகை முகமாகப் பார்த்திருந்தான்.

“என்ன அப்படி பாக்குறீங்க?”

“இல்ல… பிள்ளைக மனசப்பத்தியெல்லாம் நல்லாதான் பேசுற. ஆனா இந்த வளந்த பிள்ளையக் கவனிக்க மாட்டேங்குறியே. எத்தன நாளா விரதமிருக்கிறது” என ஏக்கக் குரலில் கேட்க, 

“நிஜம்மா சொல்லுங்க, நீங்க விரதமிருந்தீங்கன்னு” எனக்கேட்டு அவளும் சிரிக்க,

“சைவம் தானடி போட்ட. வாரத்துக்கு ஒருநாள்னு கூட அசைவம் போடலியே” என அருகே நெருங்கி வர, 

“அப்பாஆஆ…” என ஓடிவந்து மூன்று வயது ஆதினி காலைக் கட்டிக் கொள்ள, கையில் தூக்கிக் கொண்டான்.

“ம்மா… அம்பி மம்மு சாப்த்தானா? இப்ப அவங்கூத வெள்ளாதலாமா?” எனக் கேட்க, 

“ஓ… வெளையாடலாமே” என்றாள் ஏமாற்றமாக நின்ற கணவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே நமட்டுச் சிரிப்போடு. 

குழந்தையை அவள் மடியில் வைக்கச்சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ண, சிறிது நேரம் வைத்து விளையாடவிட்டு, குழந்தையை அப்பனிடம் கொடுத்தவள், ஆதினியின் அருகில் படுத்து தட்டிக்கொடுத்து தூங்கவைக்க, குழந்தை அழ ஆரம்பித்தான்.

“ப்பா… அம்மாத்த குதுங்க. அம்பிக்கு பசிக்குது. புவ்வா குதுக்கனும்” என அதிகாரத்தொனியில் பொறுப்புள்ள அக்காவாக அப்பனை அதட்டினாள்.

“பட்டுக்குட்டி சமத்து” என மகளைக் கொஞ்சிக் கொண்டே குழந்தையைக் கொடுக்க. வாங்கிக்கொண்டு அமிர்தா பக்கத்து அறைக்கு சென்றாள். இப்பொழுது மாடியில் இருந்த அவனது அறையோடு பக்கத்து அறையையும் இணைத்திருந்தான். வெளியறையில் பெரிய கட்டிலோடு கூடிய படுக்கை பிள்ளைகளோடு படுக்க. உள் அறையில் சிறியகட்டில் இவர்களுக்கென கபடி விளையாட. 

ஆதினியும் அப்பனின் அணைவில் தூங்கியிருக்க, பால்குடித்தபடியே அரைத்தூக்கத்தில் இருந்த குழந்தையை தூக்கிவந்து தொட்டிலில் போட்டு மெதுவாக ஆட்டிவிட்டாள். 

நீரோடும் வைகையிலே…

நின்றாடும் மீனே…

நெய்யூறும் கானகத்தில்…

கை காட்டும் மானே…

தாலாட்டும் வானகத்தில்…

பாலூட்டும் வெண்ணிலவே…

தெம்மாங்கு பூந்தமிழே…

தென்னாடன் குலமகளே…

மகளே உன்னைத் தேடி நின்றாளே…

மங்கை இந்த மங்கல மங்கை…

வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை…

உன் மழலையின் தந்தை…

நான் காதலென்னும் கவிதை சொன்னேன்…

கட்டிலின் மேலே…

அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்…

தொட்டிலின் மேலே…

ஆரிரோ ஆரிரோ…

ஆரிரோ ஆராரோ…

26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top