எபிலாக்…
“இன்னுமா பாஸ், மேடம் மலையிறங்கல!”
“ஆமாடா!” புன்னகையோடு அலுத்துக் கொண்டவனிடம்,
“அப்பறம் எப்படி பாஸ்?”
“அதுவா… கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டப்போ வந்ததுடா!”
“அடிக்கடி கால்ல விழாதீங்க பாஸ். ரெண்டு போதும். நாடு தாங்காது!” என்றவனை திரும்பிப் பார்த்து முறைத்தாலும், முகம் புன்னகையில் விகசித்திருந்தது சீனிக்கு.
பழனிதான் முகத்தைத் தூக்கி வைத்திருந்தாள். அதிகம் உருத்தாத மென் பட்டுப்புடவையில், தலை நிறைய மல்லிச்சரம், நலுங்கு வைத்த சந்தனம் அப்பிய கன்னங்களோடு, கண்களில் அதே மாறாத முறைப்போடு பார்த்தவளை, பார்க்கப் பார்க்க திகட்டவில்லை மன்னவனுக்கு.
இன்று வளைகாப்பு. வேற யாருக்கு, சீனியோட பழனிக்குதான்.
முதல் பேத்திக்கு தவறவிட்டதை எல்லாம், இப்பொழுது செய்து பார்க்க ஆசைப்பட்டார் கலையரசி.
அதே வீம்புதான் சீனியிடமும். முதல் குழந்தை பிறக்கும் பொழுதுதான் தான் உடனில்லை. இந்தக் குழந்தைக்காவது பிறக்கும் வரை தான் உடனிருக்க வேண்டும், அம்மா வீட்டிற்கு அனுப்ப முடியாது என்றதில்தான் முகத்தை உர்ரென வைத்திருந்தாள் பழனி.
இங்கு நீயா? நானா? என வீம்பு பிடிப்பது மாமியாரும், மருமகனும். கலையரசிக்கு மருமகன் செயல் சுத்தமாகப் பிடிக்கவில்லை. பேருகாலம் பிறந்த வீட்டில்தானே. அங்கேதான் கலையரசிக்கு சௌகர்யம். அங்கே விட்டுவிட்டு இங்கே வந்து இருக்க முடியுமா? மேலும் தன் வீட்டில் புழங்கியது போல், இங்கே அவருக்கு சௌகர்யம் போதவில்லை.
இவர்கள் இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு பழனிதான் தவித்துப் போனாள். யாருக்கென்று பேசுவது?
இறுதியில் அவன் முடிவிற்கே கலையரசி வரவேண்டியதாய்ப் போயிற்று.
பிரசவம் வரை இங்கே. பிரசவம் முடிந்து, மகளையும், குழந்தையையும் அங்கு அழைத்துச் சென்று சீராட்டி அழைத்து வரட்டும் என்று, ஆலமரத்தடியில் உட்காராத குறையாக, சமரசம் பேசி இருவரும் ஒரு முடிவிற்கு வந்தனர்.
அதன்படி ஒன்பதாம் மாதம் வளைகாப்பிற்கு ஏற்பாடு செய்தார்.
வளைகாப்பு முடித்து, துணைக்கு ஆயக்குடி அய்யம்மாவைத்தான் விட்டுச்சென்றனர்.
அவளை உட்கார விடாமல் வேலை வாங்கினார். உதவிக்கு சீனி வந்தாலும், “குழந்தை பொறந்த பின்னாடி உம் பொண்டாட்டிய எப்படி வேணும்னாலும் சீராட்டு. இப்போ அவளை எம்போக்குல விடுப்பா!” ஒரே வாக்கியத்தில் முடித்துக் கொண்டார்.
பழனிக்கும் இரண்டாம் பிரசவம், நாள் நெருங்க நெருங்க மலைப்பாய் இருந்தது. முதல் பிரசவம். வலிக்கும் எனத் தெரியும். ஆனால், எந்தளவிற்கு வலிக்கும் எனத் தெரியாதே. இப்ப முடிஞ்சுறும்… இப்ப முடிஞ்சுறும்னு தாக்காட்டியே பிரசவம் முடிந்துவிட்டது. ஆனால், இப்பொழுது எந்தளவிற்கு வலிக்குமென நன்றாகத் தெரியுமே? கொஞ்சம் கருக்கெனத்தான் இருந்தது.
*****
“ஏன், மகாராணி நம்ம கூட வந்து இருக்க மாட்டாளாம்மா? இன்னும் எதுக்கு அங்கேயே இருக்கணும்? அரண்மனை மாதிரி வீடு இருக்கும்போது அடுத்தவங்க வீட்ல எதுக்கு இருந்துக்கிட்டு!” வளைகாப்பிற்கு வந்துவிட்டு, வீடுதிரும்பிய காந்திமதி, பொதிகாசலத்திடம் பொடுபொடுக்க,
“அவங்க கொஞ்ச நாள் நிம்மதியா இருந்துட்டு வரட்டும். வாழாம ஒரு பொண்ணு வீட்ல இருக்கும் போது, அவங்க இங்க வந்திருந்தா நல்லா இருக்காது!”
“அவளுக்காக என் மகளை வீட்டைவிட்டு அனுப்பச் சொல்றீங்களா?”
“தெரிஞ்சுதான் பேசுறியா? அதுக்குன்னு வீட்டோடயே உம்மகளை வச்சுக்கப் போறியா? நாலு பேர மாதிரி அவளும் குடும்பமா வாழ வேண்டாமா?”
பொதிகாச்சலம் கோபமாகக் கேட்க, பதில் இல்லை காந்திமதியிடம். அவர் கேட்பதும் நியாயம்தானே? மகளுக்கென்ன வயதா போய்விட்டது? அடுத்து என்னவென்று யோசிக்க வேண்டாமா? அதுவும் இன்று கலையரசி, பழனிக்கு செய்ததையெல்லாம் பார்க்கும் பொழுது, தன் மகளுக்கும் இதெல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை, ஒரு தாயாக அவருக்கும் உள்ளூர எழுந்தது.
தண்டபாணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் தங்கையையும், தங்கை மகளையும் அவன் தாங்குவது கண்ணால் கண்ட பிறகு, மகள் தவறவிட்ட வாழ்க்கை கண்கூடாகக் தெரிந்தது.
பொதிகாச்சலத்திற்கு ஏற்கனவே பேத்தியைக் கூட வைத்துக் கொஞ்ச முடியவில்லையே என்ற ஆதங்கம். இதில் காந்திமதியும் வாய் கொடுக்க, என்றுமில்லாமல் இன்று மனைவியை ஒரு பிடி பிடித்தார்.
“நீ வேணா வீட்ல வச்சு அழகு பாரு! ஆனா, அப்பாவா எனக்கும் கடமை இருக்கு. கூடிய சீக்கிரம் வேற மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணனும். என்ன ஒன்னு பழசெல்லாம் சொல்லி, மானம் மரியாதைவிட்டு மாப்பிள்ளை தேடணும். எல்லாம் என் தலையெழுத்து!” தலையில் அடிக்காத குறையாக அலுத்துக் கொண்டவருக்கு, அது ஒன்றும் இலேசுப்பட்ட காரியமில்லை எனத் தெரிந்தது.
இது கூட சீனியின் முன்னெடுப்பால்தான். மீ அன்ட் மீ. எனிதிங்க் அபௌட் மீ. (Me and me. Anything about me) இதுதான் தங்கையின் குணம் எனத் தெரியும். அவள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். அண்ணனாகத் தன் கடமையைச் செய்ய நினைத்தே, அப்பாவை முடுக்கினான்.
“வேண்டுமானால் தீனாவுடன் மீண்டும் ஒருமுறை பேசிப் பார்க்கலாமாப்பா” என்றான்.
“அது வேண்டாம்!” என்றுவிட்டார்.
அவன் ஒன்றும் மகள் மீது ஆசைப்பட்டு வந்த மாதிரித் தெரியவில்லை. ரஞ்சனியை வைத்து, சீனியிடமிருந்து கஃபேயை கைப்பற்றுவதுதான் அவனது எண்ணமாக இருந்திருக்க வேண்டும். அது முடியாதெனத் தெரிந்ததினால்தான் எளிதாக இவளை ஒதுக்கிவிட்டான். உண்மையான நேசம் வைத்திருந்தவனாக இருந்திருந்தால் தேடி வந்திருப்பான். இவள், பரஸ்பர ஒப்புதலோடு விவாகரத்து என்றதும் எளிதாக சம்மதித்திருக்க மாட்டான்.
இந்தக்காலத்தில் விவாகரத்து, மறுமணம் என்பதெல்லாம் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால், இவளுக்கோ கல்யாணத்தன்றே ஓடிப் போனவள், ஓடிப் போனவனோடும் ஒழுங்காக வாழத் தெரியாதவள் என ஆயிரத்தெட்டு இடியாப்ப சிக்கல். இதையெல்லாம் தெரிந்து ஏற்றுக் கொள்ளும் ஒருவனைத் தேடவேண்டும். நினைத்துப் பார்க்கவே ஆயாசமாக இருந்தது பொதிகாசலத்திற்கு. நேரம் காலம் கூடி வந்தால், எல்லாம் கைகூடுமென ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு வரன் தேட ஆரம்பித்தார்.
அதுவரை வீட்டில் சும்மா இருக்க வேண்டாமென தினமும் சூப்பர் மார்க்கெட் வந்து, மேற்பார்வையிடச் சொன்னார். நாளைக்கு உனக்கும் அதில் பங்கு எனும்பொழுது, நீயும் எல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென கூற, அப்பா பேச்சிற்கு இப்பொழுது சற்றே செவிமடுத்தாள் ரஞ்சனி. பட்ட அனுபவம் சிறிதாவது பாடம் கற்றுக் கொடுக்காதா என்ன?
*****
“வரவர உனக்கு வெக்கமத்துப் போச்சுடீ!”
“உங்ககிட்ட எனக்கென்ன வெக்கம்? இதையே நான் எத்தனை தடவை உங்ககிட்ட சொல்லியிருப்பேன்”
“எனக்கு வெக்கமாயிருக்கே! ஒரு துண்டையாவது மேல போட்டு நிக்கலாம்ல! கண்ணு பட்டுப் போகும்டீ! வெளியே ஆச்சி, தாத்தா வேற இருக்காங்க!” சொன்னவன் முகமெங்கும் நாணத்தின் சாயல்.
“இப்போதான் அவங்க வெளியே இருக்கறது தெரியுதா? மதியம் அசந்து தூங்கவிடாமப்…” என்றவளது வாயை அவசரமாக கைவைத்து மூடியவன்,
“என் மானத்தை வாங்க நீ ஒருத்தி போதும்டீ!” அவளது கேலியில் சீனியின் முகமும் லஜ்ஜையால் சிவந்தது.
“பார்றா… கருப்பட்டிக்கு கூட வெக்கத்துல முகம் சிவக்குது. உங்கள ஊத்தி விடச் சொன்னதே அவங்கதான். அம்மாச்சிக்கு குனிஞ்சு நிமிர முடியலையாம்!” என்றவள்,
“ஒரு தடவை லேபர் வார்டுக்குள்ள போய்ட்டு வந்துட்டாலே, நீங்க விட்டு வச்சிருக்குற கொஞ்சநஞ்ச கூச்சத்தையும் முழுசா, அங்கே உருவிட்டு விட்டுருவாங்க. கல்யாணத்துக்கு முன்ன, அங்க இங்க தெரியக்கூடாதுன்னு ஆயிரம் பின்னுபோட்டு சேலை கட்டுவோம். ஒரு பிள்ளையப் பெத்தாச்சுன்னு வைங்க, அதுக அழற நேரம் வீடா, பஸ்ஸா, ட்ரெயினா… எங்க என்னான்னு எல்லாம் பாக்க முடியாது. கூட்டமாவது, கும்பலாவது. ஒட்டிக்கிட்டு இருக்குற சொச்ச கூச்சத்தையும் பிள்ளைக தொடச்சு எடுத்துறுங்க. இதுல எங்க வெக்கப்படறது.” வாழைக் குலைபோல் சரிந்த வயிற்றோடு நின்றவளை, அவன் பார்வை வருடியதில், அவளும் கூச்சத்தில் நெளிய, புன்னகை மிளிற பார்த்தவன் கண்களில் சந்தோஷச் சாரல்.
“ஹலோ… கருப்பட்டி! ரசிச்சது போதும்! நீங்கதானே ஊருக்கு விடமாட்டேன்னீங்க. அப்ப, இதெல்லாம் நீங்கதான் செய்யணும். சூடு ஆறுறதுக்குள்ள ஊத்திவிடுங்க!” இறங்கு பொழுதில் இடுப்போடு சுடச்சுட தண்ணீர் ஊற்றிவிட வந்தவன்தான், அவள் நின்ற கோலம் பார்த்து, கண்களில் தாய்மை பூரிக்கப் பார்த்து நின்றான்.
கண்களில் காதல் பொங்க அவனையே பெண்ணவள் வைத்த கண் வாங்காமல் பார்த்து நிற்க,
“ஆத்தாடீ… ஃப்ரூட்டி… நீ மொறச்சுக்கூடப் பாரு. ஆனா, இப்படி மட்டும் பாத்து வைக்காதேடீ! தாங்காது” பொய்யாக மிரண்டவன், இடுப்போடு தண்ணீர் ஊற்றிவிட்டு, துண்டை எடுத்து மேலே போட்டுவிட்டு வேகமாக வெளியேறியவனை, அவளது வெடிச்சிரிப்பு பின் தொடர்ந்தது.
அடுத்த ஒரு வாரத்தில் நடு இரவில் இடுப்பு வலிகண்டு, அதிகாலைக்கெல்லாம் மகன் அவனது கைவந்து சேர்ந்துவிட்டான். ஏனோ, இடக்கையில் மகனை ஏந்தியவனது வலக்கரம், மகளை தோளோடு அணைத்துப் பிடித்து ஆதுரமாக முத்தம் வைத்தது. மகளுக்கு அப்பொழுது கொடுக்க முடியாதது. அவனே அறியாமல் கண்கள் கலங்கிப்போயிற்று. குட்டியாக தம்பியைப் பார்த்த அமிர்தாவிற்கும் சந்தோஷம் தாளவில்லை.
பழனியை நார்மல் வார்டுக்கு மாற்றிவிட்டு… செவிலி, உள்ளே சென்று பார்க்கலாம் என்று கூற, கலையரசியைத் திரும்பிப் பார்த்தான்.
இவ்வளவு நேரமாக அவன் தவிப்பதைப் பார்த்தவர், “நீங்க போய்ட்டு வாங்க தம்பி! நான் அப்பறம் பாத்துக்கிறேன்!” என்று சொல்ல, சிரிப்போடு மூவரும் உள்ளே சென்றனர்.
இடக்கையில் மகனை ஏந்திக் கொண்டு, வலக்கையில் மகளைப் பிடித்து உள்ளே வந்தவனை சோபை மிளிர்ந்த முகத்தோடு, புன்னகை மிளிறப் பார்த்திருந்தாள் பழனி.
வேகமாக அம்மாவிடம் ஓடிய அமிர்தா, “ம்மா… இனிமே பெட் டைம் ஸ்டோரி தம்பி பாப்பாக்கு நான்தான் சொல்லுவேன்!” அக்கா பொறுப்பிற்கு வந்துவிட்ட மகளை ஆதுரமாகத் தழுவியது பெற்றவர்கள் பார்வை. ஒரே நாளில் மகள் சட்டென தங்கள் கண் முன்னாலே வளர்ந்துவிட்டது போலிருந்தது.
காலம் எத்தனை வேகமாக ஓடிவிடுகிறது. நம்மால்தான் அதற்கு ஈடு கொடுத்து ஓட முடியவில்லை. நேற்றைய கவலையிலும், நாளைய பயத்திலும் இன்றே தேங்கி நின்று விடுகிறோம். நாளை என்பது நாளை வரட்டுமே! இன்றைய பொழுதை, இந்தக் கணத்தை, இப்போதைய சந்தோஷத்தை இப்பொழுதே அனுபவித்து வாழ்ந்து விடுவோமே!
நேற்று என்பதும் கையில் இல்லை…
நாளை என்பதும் பைய்யில் இல்லை…
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு…
தோழா… முத்த கூத்துக்கள் யாருக்காக…
மொத்த பூமியும் கூத்துக்காகதான
மங்கையவள் பார்வை மன்னவனை ஆசை பொங்க பார்த்து வைக்க, “ப்ரூட்டி!” என்றவனின் குரல் வெகுவாகக் குழைந்து வந்தது.
“இதுக்கு நீ மொறச்சே பாரு! இப்போதைக்கு அதுதான் நல்லது!” சந்தோஷத்தில் முகமெல்லாம் பூரிப்போடு கண்கள் பனிக்க கூறியவனை, இதழ்களில் புன்னகை தவழ விழியகற்றாமல் பார்த்து வைக்க, லஜ்ஜையோடு இவன்தான் பார்வையைத் திருப்ப வேண்டியதாய்ப் போயிற்று.
எண்ணிரண்டு பதினாறு வயது..
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது…
எண்ணிரண்டு பதினாறு வயது…
முன்னிரண்டு மலர் எடுத்தாள்
என் மீது தொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும்
சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்…
வாழ்க வளமுடன்

Nice story
Thank youuuuuu so much chitra ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
தண்டபாணிக்கு தனியாக ஒரு கதை எழுதுங்க
முக்கனியும் சக்கரையும் தெவிட்டா சுவை.அழகான உரைநடை.Worth waiting for the end.
😘😘😘😘😘
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
Nirmala vandhachu 😍😍😍
Late ahh vandhalum latest episodes super ma
💐💐💐
Thank youuuuuu so much nimmi ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
Cute epilogue Writerji
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
Super story seenipazham super
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
தண்டபாணி பற்றி கடைசில எதுவும் சொல்லவில்லையே கதை அருமையாக இருந்தது
https://smeshwaritamilnovels.com/mama-maapleh/
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫