மாமா! மாப்ளே! teaser

வேலுண்டு! வினையில்லை!

“டேய், நான் ஹீரோடா!”

“அது போன கதைக்கு!”

“நான் மாப்பிள்ளைக்கு மச்சான்டா!”

“நாங்க மட்டும் யாராம். தாத்தான்னா சொன்னோம். நாங்களும் மச்சான்‌தான்!”

“நான் மாப்பிள்ளை வீட்டுக்காரன்டா!”

“நான் பொண்ணு வீட்டுக்காரன் பாஸ்!”

“இப்போ என்னதான்டா சொல்ல வர்ற!”

“இந்தக் கதைக்கு நீங்க கெஸ்ட் ரோல்கூட இல்ல. சீஃப் கெஸ்ட் மட்டும்தான். கூப்பிடும்போது வந்தா மட்டும் போதும். அங்க உங்க பையன் கூப்பிடறான் பாருங்க! போய் டயப்பர் மாத்துங்க!”

“டேய்… ஓவராப் போற!”

“எங்களையும் பெர்ஃபார்மென்ஸ் பண்ணவிடுங்க பாஸ். எல்லா எடத்துலயும் நீங்களே தலையை நீட்டினா எப்படீ? க்ளாப் அடிச்சு, ஸ்டார்ட், ஆக்ஷன் சொல்லிட்டுக் கிளம்புங்க!”

“நடத்துங்கடா… என்னைக்காவது பாஸ்னு பாவமா மூஞ்சிய வச்சுக்கிட்டு வந்து நிப்பயில்ல. அன்னைக்கி வச்சுக்கறேன்!” 

“வர்றப்போ பாத்துக்கலாம். கிளம்புங்க காத்து வரட்டும்.” தெனாவட்டாய் ஒற்றைக் காலை ஆட்டிக்கொண்டு, விரல்களால் கழுத்துக்கடியில் விசிறியபடி கூறியவனிடம்,

“உனக்கு இந்தக் கதையில ஜோடியே இல்லடா. சாபம் கொடுக்கறேன்.”

“தாங்க்யூ பாஸ்! எனக்குதான்‌ பக்காவா ரொமான்ஸ் சீன் வைக்கப்போறாங்க பாருங்க! நீங்க எல்லாம் புகையப் போறீங்க!” 

“உனக்கு ரொமான்ஸ் எல்லாம் சிடுமூஞ்சி தண்டபாணி கூடத்தான்டா! எனக்கே கிள்ளித்தான்டா கொடுத்தாங்க!”

“அது உங்க நேரம் பாஸ். இப்போ எங்க நேரம்!” 

“பாக்கலாம்டா!”

“போங்க பாஸ். அதெல்லாமா பாப்பீங்க. தலையை‌ ஒரு பக்கமாகச் சாய்த்து, நாணிக்கோணி சட்டை நுனியைத் திருகியவாறு, கால் கட்டைவிரலால் நிலத்தில் கோலம்போட, அதைப் பார்க்க சகிக்காதவனாக, 

சீனி, “அடச்சே, நேரா நில்லு பக்கி. பாக்க சகிக்கல!” என்றான் கடுப்பாக. 

சட்டென நிமிர்ந்து நின்றவனுக்குள், ‘கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ. போவோம் என்ன பண்ணிறுவாங்க. இங்கேயும் வந்து அவரே என்ட்ரி கொடுத்தா என்ன அர்த்தம். அப்போ நம்ம என்னாத்துக்கு?’ ராகவன் மைன்ட் வாய்ஸ்.

“ஏம்ப்பா ராகவா?”

“யாருப்பா அது?”

“ரீடர்ஸ்ப்பா!”

“வாங்க! வாங்க! ஆல்வேஸ் வெல்கம்ஸ் யூ!”

“அதெல்லாம் இருக்கட்டும். இந்த தண்டபாணினு ஒரு கேரக்டர்…”

“வருவாரு… வருவாரு… ஏன் ஹீரோவேதான் என்ட்ரி கொடுக்கணுமா? நாங்கெல்லாம் என்ட்ரி கொடுத்தா ஒத்துக்க மாட்டீங்களா? அடுத்து அவரோட சீன் தான். பாஸ்! ரீடர்ஸ் கூப்புடறாங்க. வந்து க்ளாப் அடிச்சுட்டுப் போங்க!”

“இதுக்கு மட்டும் நானாடா? நல்லாயிருங்கடா… ஆக்ஷன்… ரெடி… ஸ்டார்ட்!”

12 thoughts on “மாமா! மாப்ளே! teaser”

  1. என்னாது…ராகவனுக்கு ஜோடி இல்லையா? இப்படி சொல்லிட்டு கடைசி எபியில் ஒருத்தியை அறிமுகப்படுத்தி
    பழனி சீனி கதையின் மூன்றாம் பாகம் எழுத author நம்மளை தயாராக சொல்றாங்களோ? சரி சரி ஒழுங்கா எபி வந்தா போதும்…முதல்ல தண்டபாணி கதையை முடிக்கட்டும்…

  2. புது தளத்திற்கு புது கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ் 🎉🎉🥳🥳💖💖

    Super teaser 🤩🤩🤩🤩
    கதை பெயர் கலக்கல் 👌👌

    பாவம் பக்காவா ரொமான்ஸ் வைப்பாங்க ரைட்டர்ன்னு காத்திருக்கான் பயபுள்ள…. 🤭🤭🤭
    இவனை தண்டபாணி கூட கோர்த்து விடப் போறாங்க…

    1. 🙈🙈🫣🫣🙈 😂😂😂அதே … அதே… நம்மலப் பத்தி தெரியல பயலுக்கு
      Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫

  3. ஹய்யா ரொம்ப எதிர்பார்த்தேன். வாங்க. வாங்க. எப்ப எப்ப யூடி கொடுப்பீங்கனு சொல்லிடுங்க பாப்போம்

    பிரதிலிபில சைட் பத்தி சொன்னதுக்கு தாங்க்ஸ்மா

    1. வாரத்துக்கு மூனு எபி போட முடிவு பண்ணியிருக்கேன் மா.
      Thank you so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top