27
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம் பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரை தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது…
காற்றோடு கலந்து வந்த பாடல், செவி தீண்டி, உள்ளம் ஊடுருவியது. மாய வலையில் கட்டுண்டவள் போல் அவனையே பார்த்து நின்றாள். இன்னும் அதே பட்டு வேட்டி, சட்டையில்தான் இருந்தான். முழங்கால் அளவிற்கு வேட்டியை மடித்துக் கட்டியிருந்தான். கோயிலுக்கு சென்று வந்ததில் நெற்றியில் சந்தனமும், திருநீறும் இடம் பிடித்திருந்தது. கலைந்த முன்னுச்சி முடி, காற்றிலாடி மனம் வருடியது.
தென்னங்கீற்றின் சலசலப்பும், தென்னந்தோப்பின் சிலுசிலுப்பும், மன்னவன் பார்வையின் குறுகுறுப்பும், பெண்ணவள் மேனியில் நொடியில் கணகணப்பை மூட்டியது. அருகே வந்தவன், அவளைக் கடந்து செல்ல, அவனைப் பின் தொடர்ந்து தலை மட்டும் திரும்ப, அவனும் நின்று திரும்பிப் பார்த்தான். உள்ளே வரும் உத்தேசம் இல்லையா என்றது அவனது பார்வை.
அவனைத் தொடர்ந்து பின் செல்ல, வாசல் படிதாண்டி உள்ளே கால் வைத்ததுதான் தெரியும், சட்டென கைகளில் அள்ளிக் கொண்டான்.
“ஆத்தீஈ” என்றவள் வாய் திறக்கும் முன் வாய்ப்பூட்டு போட்டான் இதழ்கொண்டு. முன்னறிவிப்பின்றி தொடுத்த எல்லைப்புறத் தாக்குதலில் திக்குமுக்காடிப் போனவள், அகதியாய் அவன் கைகளிலேயே சரணடைந்தாள்.
கைகளில் ஏந்திக் கொண்டே கூடத்து ஊஞ்சலில் அமர, ஊஞ்சல் பின் சென்றதில், சற்றே இருவரும் நிலை தடுமாற, கழுத்தை வளைத்துக் கட்டிக்கொண்டாள். மார்போடு ஒன்றிக் கொள்ள, அவனும் இடையோடு அழுத்திப் பிடித்துக் கொண்டே ஊஞ்சலில் அமர்ந்தவன் மெல்ல கால்களை உந்த, வானில் மிதக்கும் உணர்வு பெண்ணவளுக்கு.
“மேகி” என்றவன் குரலில் தெரிந்த தாபமே அவளை மயக்கத்தில் ஆழ்த்த, கழுத்தில் முகம் புதைத்தவன், “நான் எடுத்துக் கொடுத்த புடவை இது இல்லையே” என்றவன் குரல் கரகரத்தது. அவளிடம் அமைதி மட்டுமே பதிலாகக் கிடைக்க,
“மேகி” என்றான் சற்றே அழுத்தமாக.
“அந்த ஸாரிய எடுத்துட்டு வரல!” என்றவளை தலை நிமிர்த்திப் பார்த்தான். பார்வை பாவையவளைத் துளைத்தது. சில கணங்கள் மௌனத்தில் பிடியில் கரைய, கண்டுகொண்டேன் என்றது அவனது கள்ளச்சிரிப்பு. எடுத்து வைத்ததைத்தான் பார்த்தேனே என்றது சில்மிஷப்பார்வை. அவன் பார்வையின் வீச்சு தாங்காமல், மீண்டும் அவன் மார்பையே தஞ்சமடைய, விடுதலை பெறத்துடித்த சிரிப்பை சிரமத்துடன் உதட்டுக்குள் அடக்கினான்.
“அண்ணி, அண்ணா, எல்லாரும் இருந்தாங்க… எப்படி அந்தப் புடவையைக் கட்டுறதுன்னு தான்” என்று தவிப்பாய் இழுக்க,
“இப்பக் கட்டலாமே” என்றவன் மீசை முடி கழுத்து வளைவில் குறுகுறுத்தது. அவஸ்த்தையாய் நெழிந்தவள்,
“இடுப்புலயே நிக்காது… வளவளன்னு நழுவிட்டு… அதைக் கட்டுறதுக்கு சும்மாவே இருக்கலாம்!” நொடிப்பாய் பதில் கூறியவள், கூறியதன் பொருள் விளங்க, பட்டென நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, கண்கள் மின்ன, வாய்விட்டு வெடித்துச் சிரித்தான்.
“அதுதானுங்க அம்மணி நமக்கும் வேணும். நம்ம மெனக்கெட வேண்டாம் பாருங்க!” என்று கேட்டு கண்சிமிட்டியவன், “கற்பனையில்லாமல் கட்டில் மேல் சேராதேன்னு… அனுபவசாலிக சொல்லியிருக்காங்கடீ!” என்றான் மலர்ந்த சிரிப்போடு. சிவந்த முகத்தை அவன் மார்பிலேயே மீண்டும் புதைத்துக் கொண்டாள்.
“கட்டியே ஆகணுமா?” என்றாள் சிணுங்கலாய் முகத்தை நிமிர்த்தாமலே.
“உன்னிஷ்ட்டம்!” என்ற பதிலே எனக்கு இஷ்ட்டம் என்றது.
இந்த இரவுக்கென்றே அவன் தேர்ந்தெடுத்தது. புடவை எடுக்கும் பொழுதே அத்தனை கலாட்டா. இவள் வேண்டாமென ஆர்ப்பாட்டம் பண்ண, அவன் வேண்டும் என அத்தனை அழிச்சாட்டியம் செய்தான்.
“எல்லாரும் இருப்பாங்க. எப்படி இதைக் கட்டுறதாம்?” எடுக்கும் பொழுதே முகம் சுணங்கினாள்.
“நான் பார்க்க மட்டும் தான்” என்று பிடிவாதமாக எடுத்தான்.
“நான் குளிச்சுட்டு வர்றேன்” என்றவன் மீண்டும் ஒரு முறை கழுத்தில் அழுந்த இதழ் பதித்து அவளை இறக்கிவிட்டான். அது அவள் புடவை மாற்றிக் கொள்ள கொடுத்த அவகாசம் என்பது புரிந்தாலும், கூச்சம் அவளை நகரவிடாமல் பிடித்து வைத்தது.
“மேகி… இது நமக்கான நாள். உனக்குப் பிடிக்கலைனா வேண்டாம்” என்றவன் பேச்சில் சிறு ஏமாற்றம்.
பிடிக்கவில்லை என்பதெல்லாம் இல்லை. அதையும் தாண்டி முதன்முறையாக என்பதால் ஏதோ ஒரு தயக்கம் அவளுக்குள். பெரியவர்கள் ஏற்பாடு செய்து, அறைக்குள் காத்திருப்பது என்பது வேறு. தானே அலங்காரம் செய்து காத்திருப்பது, அதுவும் முதன்முறை என்பதில் ஏதோ ஒரு இனம்புரியா அவஸ்த்தை. இந்த மாதிரி விஷயங்களில் ஆண் முதலடி எடுத்து வைப்பதுதானே காலம்காலமாக நடப்பது. (அப்படித்தானுங்களே!) ஒரு பெண் தானாக முன்னெடுப்பதென்பது, கல்யாணம் செய்து குழந்தை பெற்று, சில வருடங்கள் சென்ற, தம்பதிகளுக்குள்ளேயே இன்னும் அசாதாரணமாக இருக்க, என்னதான் கால மாற்றம் என பெண்ணியம் பேசினாலும் மரபும் கொஞ்சம் வேலி போட்டது.
அவன் துண்டை எடுத்துக் கொண்டு வெளியே குளிக்கச் சென்றுவிட, சில நிமிடங்கள் தயக்கத்தில் கரைய, ‘இதில் என்ன இருக்கிறது… சேலை தானே? அதுவும் இருவர் மட்டும் தானே? அறைக்குள் தானே? புருஷன் தானே? பொண்டாட்டி தானே?” என்று பல தானேக்கள் தனக்குள்ளே போட்டு, தனக்குத்தானே சமாதான உடன்படிக்கை செய்து கொண்டவள், அவன் ப்ளவுஸ் தைக்க கொடுத்தபொழுது நடந்ததை நினைத்தவளுக்கு, இப்பொழுதும் முகம் சிவந்துவிட்டது.
கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் எப்படி அந்த டிசைனை டெய்லரிடம் காட்டினான். அதுவும் ஏற்கனவே ஃபோனில் அந்த டிசைனை டவுன்லோட் வேறு செய்து வைத்திருந்தான். லேடீ டெய்லர்தான் என்றாலும் இவள்தான் முகத்தை எங்கு வைப்பதெனத் தெரியாமல் தவித்துப் போனாள்.
“உங்களுக்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்ல. இப்படியா டிசைன் காமிப்பாங்க!” வெளியே வந்தவள் பொறிந்து தள்ள,
“நீதானே, அன்னைக்கி கிரி ஒய்ஃப் போட்டிருந்ததைப் பார்த்து ஆசைப்பட்ட.”
“ஆசையெல்லாம் படல. இது மாதிரி நம்ம போட்டா எப்படி இருக்கும்ன்னு நெனச்சுதான் பாத்தேன். அது ஸ்லீவ்லெஸ் ஷார்ட் டாப். ஹிப் மட்டும் தான் தெரியும். இப்ப நீங்க சொன்னதுல ப்ளவுசே லெஸ்ஸாத்தான் இருக்கும் போல! அதெல்லாம் துவைச்சு வெளியே காயப்போட முடியுமா? பாக்குறவங்க என்ன நெனப்பாங்க?”
“ஏன்டீ… இத்துனூண்டு ப்ளவுஸ் மேட்டர். அதை என்னமோ சர்வதேச பிரச்சினை லெவலுக்கு கொண்டு போற?”
“ப்ளவுஸ் இத்தனூண்டுங்கறதுதான் மேட்டரே!”
“மேட்டருக்கு ப்ளவுஸ் இத்துனூண்டு இருந்தா என்ன? இல்லைனா என்ன?” வாய்க்குள் முணங்கியதில் இவள்தான் கப்பென வாயடைத்து நின்றுவிட்டாள்.
“இப்ப என்ன… வேண்டாம்னு சொல்லிறவா?” என்று மீண்டும் வேகமாக, கோபமாகவும் கூட கடைக்குள் திரும்ப,
“வேண்டாம்… வேண்டாம்… வாங்க!” என்று இவள்தான் அவனை சமாதானப்படுத்தி அழைத்து வரவேண்டியதாய்ப் போயிற்று.
பேக்கிலிருந்து புடவையை எடுத்தவளுக்கு, சிறுபிள்ளை போல் அன்று அவன் சிலிப்பிக் கொண்டதை நினைத்து, இன்றும் சிரிப்புதான் வந்தது. கட்டியிருந்த புடவையை மாற்றி, புதுப் புடவையைக் கட்டிக் கொண்டாள். பின்னால் ப்ளவுசை முடி போட முடியாமல் கைகளை எக்கிக் கொண்டிருந்தாள். வெறும் முடி மட்டும் போடும், டீப் லோவ் கட் கொண்ட ஸ்லீவ் லெஸ், ப்ளவுஸ் அது.
சட்டென முடிச்சு இறுக்கியதில் கப்பென அவளுக்கு மூச்சடைத்தது. முதுகு சில்லிட்டதில் இதயத் துடிப்பு அமளிதுமளிப்பட்டது. குளித்துவந்த ஈரத்தோடு, வெறும் பனியன், ஷார்ட்சோடு முதுகோடு உரசி நின்றவன் கண்ணாடி வழியாகப் பார்த்து உல்லாசமாக விசிலடித்தான். முந்தானையை ஒற்றையாக விட்டிருந்தாள். பார்த்தவன் கண்களில் சடுதியில் செவ்வரி ஓடியது. நெஞ்சுக்குழி வறண்டு, இதயத்துடிப்பு எகிறியது.
ஒயின் சிவப்பு வண்ணத்தில் ஆங்காங்கே சிறு வெள்ளைக் கற்கள் பதித்த, ஈசல் இறகு போன்ற, உள்ளதை உள்ளபடி காட்டும் பட்டர் ஷிஃபான் புடவை. எப்பொழுது வேண்டுமானாலும் நழுவி விடுவேன் என்ற அபாய எச்சரிக்கையோடு, தாழம்பூ நிறத்து மேனியைத் தழுவி, யாம் பெற்ற இன்பம் என அவனை வெறுப்பேற்றியது.
“இப்ப தான்டீ கிஃப்ட் வ்ராப்பர் பிரிக்கிற ஃபீலே வரும்!” முடி போட்டவன் குரலில் தாபம் தளும்பியது. பின் கழுத்தில் சூடாக மூச்சுக் காற்று உரச, கொதிநிலை கண்டது பெண்ணவள் உடல் நிலை. சாதிமல்லி வாசத்தோடு, ஈரக்கூந்தலின் சில்லிப்பு அவனைப் பித்தனாக்கியது. பெண்ணவள் விரலோடு, விரல் கோர்க்க உள்ளங்கை சில்லிட்டிருந்தது. பின்னாலிருந்து இடை வளைத்திருந்தவன் கரம் அவளது நடுக்கத்தை உணர,
“மேகி… விடிய விடிய எக்ஸாம்க்குப் படிச்சுட்டு, எக்ஸாம் ஹாலுக்குள்ள நுழஞ்சதும் எல்லாம் மறந்துட்ட மாதிரி நானே டென்ஷன்ல இருக்கேன். நீயும் பயந்து என்னையும் பயமுறுத்தாதேடீ!” என்றவன் கரம் இடையில் அழுத்தமாகப் பதிந்தது. பதட்டத்தையும் மீறி சிரித்துவிட்டாள். திரும்பி நின்று நேருக்கு நேர் முகம் பார்த்தாள். அவன் தொண்டைக்குழி ஏறியிறங்கியது. எக்கி முத்தம் வைக்க உந்தித்தள்ளிய ஆசையை நாணம் திரைபோட்டுத் தடுத்தது.
அவனது பார்வையில் தெரிந்த மயக்கம் பெண்ணவளைக் கட்டியிழுத்தது. பார்வைகள் ஒன்றுக்கொன்று கவ்விக் கொள்ள, பரிசுப் பொருளைப்பிரித்துப் பார்க்கும் சிறுபிள்ளையின், ஆர்வமும், அவசரமும் அவன் கண்களில். மன்னவனது இத்தனை நாள் காத்திருப்பின் அவசரம் புரிபட, பெண்ணவள் அச்சத்திற்கும், கூச்சத்திற்கும் நடுவில் சிக்கித் தவித்தாள். தரையில் முதலடி பதிக்கும் மழலையின் பாதம்போல் அத்தனை கூச்சம் பெண்ணவளுக்குள்.
இனி தாங்காதென, தாமதிக்காமல் மன்னவன் முத்த முற்றுகையைத் தொடங்கிவிட, கிறங்கித் துவண்டவளை, கைகளில் ஏந்தியவன், கட்டில் களம் சேர்த்தான்.
நிராயுதபாணி தாக்கப்படக் கூடாதென்பதும், இருளில் தாக்குதல் நிகழ்த்தக் கூடாதென்பதும் போர்க்கள விதி. கட்டில் களத்தில் விதிகளுக்கே விதிவிலக்கு.
இதழ்கள் இடஞ்சுட்டிப் பொருள் விளக்க, விரல்கள் மேனியில் மீட்டிய மதனராகத்தில் மங்கையவள் விழிகள் தன்னால் மயங்க ஆரம்பிக்க, கண்கள் தானாக கிறங்கி மூடிக்கொள்ள, பெருமழையின் பேரிரைச்சலாய் மூச்சுக்காற்று அறையின் நிசப்தம் நிறைத்தது.
“மேகி… கண்ண மூட மாட்டேன்னு டீல் பேசினதா ஞாபகம்!” செவியோரம் பிதற்றிய மதனின் மந்திரக் குரல் அவளை வேறு உலகம் இட்டுச் சென்றது. சட்டென இனிப்பும், புளிப்பும் கலந்த திராட்சையின் ருசி இதழ்களுக்குள்.
வெட்கத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுக்க, தொடுத்த வழக்குகள் எல்லாம், எதிர் கட்சி ஒத்துழைப்பின்றி வாய்தா கேட்டே வழக்கு தள்ளுபடி செய்யப்பட, வேறு வழியின்றி வழக்குத் தொடுத்தவனே ஆயுள் முழுமைக்கும், அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து கையொப்பமிட்டான், முத்தப் பேனா கொண்டு மங்கையவள் மார்பி்ல். ஆசை மேலிட, அச்சமும், வெட்கமும் சேர்த்தே களையப்பட, களைத்தவனையே இழுத்துப் போர்த்திக் கொண்டாள் மாது.
கொஞ்சி, கெஞ்சி, மிஞ்சி தன் விளையாட்டைத் துவக்க, நாணக்குடை அவள் பிடித்தும் உயிரின் அடி ஆழம் வரை சாரல் மழை. பூத்தூரலாய் தொடங்கிய மோகமழை, ஊசித்தூரலாய் உருமாறி, கட்டிலில் மையம் கொண்ட காதல் புயல், சற்று நேரத்திற்கெல்லாம் இடி, மின்னலுடன் கூடிய முத்தமழையாய் கொட்டித் தீர்த்தது. மன்மதக்கலை அத்தனையும் ஒரேநாளில் பயிலும் அவசரம் அவனிடம்.
செல்லச் சிணுங்கல்களுக்கும், அர்த்தமற்ற பிதற்றல்களுக்கும், கொலுசொலியும், வளையோசையும் ஜதிகூட்ட, தயக்கத்தில் தடுமாறி, தடம் மாறி, தடமறிந்து, தடம் பதிப்பதற்குள், ஒருவருக்குள் ஒருவர் மூழ்கித் தொலைந்தே போயினர், மீளும் எண்ணமின்றி.
ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும்
காற்றாக உருமாறி
முந்தானை படி ஏறவா
மூச்சோடு குடி ஏறவா
உன் இடையோடு நடமாடும்
உடையாக நான் மாறி
எந்நாளும் சூடேரவா
என் ஜென்மம் ஈடேரவா
உன் தின்னென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில்
இச்சென்ற இதழ் வைக்கவா
இச்சைபோல் இலை வைக்கவா
உன் உம்மென்ற சொல்லுக்கும்
இம்மென்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா
மௌனத்தில் குடி வைக்கவா
அகம் பாதி முகம் பாதி
நகம் பாயும் சுகம் மீதி
மறைத்தாலும் மறக்காது அழகே…
மெலிதாகக் கேட்ட கொலுசொலியில் திரும்பிப் பார்த்தான். இளம் மஞ்சள் நிறப் புடவையில், அன்றலர்ந்த பூவாய் நடந்து வந்தவளைப் பார்த்த நொடி, புன்னகை பளிச்சிட்டது இருவர் முகத்திலும்.
“தனியா என்ன பண்றீங்க?” குளித்து ஈரத்தலையோடு வந்து நின்றவளை இழுத்து கை வளைவில் வைத்துக் கொண்டான். இரவின் மந்தகாசம் இருவர் முகத்திலும். மெல்லிய நாணம் கலந்த புன்னகை செவ்வரியோடிய விழியோரம்.
“தென்னைமரத்தையே அண்ணாந்து பாக்குறீங்களே? ஒரு வேளை, ஒவ்வொரு மரத்துலயும் தொண்ணூறு முட்டை இருக்கான்னு எண்ணிப் பாக்குறீங்களோன்னு நெனச்சேன்!” என்றாள் சிரிப்போடு.
புரியாமல் ஒரு கணம் விழித்தவன், அடுத்த நொடி அமர்த்தலாகச் சிரித்தான்.
“இந்த மரத்துல தொண்ணூறு முட்டை இருக்கான்னு தெரியாது. ஆனா, என் கணக்குப்படி பாத்தா, இன்னும் பத்தேமாசத்துல இந்த வீட்ல குவா குவா சத்தம் மட்டும் கன்பார்ம்” என்று கண்சிமிட்ட,
“என்னவோ செஞ்சு வச்சமாதிரி சொல்றீங்க?” என்றவள் குரலில் அத்தனை நாணம்.
இதழில் நெழிந்த குறுஞ்சிரிப்போடு, குனிந்து காதோரம் அவன் சொன்ன நாள் கணக்கில்,
“அடப்பாவி… இதெல்லாமா கணக்குப் பண்ணுவீங்க?” கேட்டவள் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
“கணக்குப் பண்ணனும்னு முடிவுகட்டிட்டா எதுவும் பக்காவா பண்ணனும். அதனாலதானே நேத்து நைட், என்னோட ஆக்ஷன் ஒவ்வொன்னுக்கும், உன்னோட ஆப்போசிட் ரியாக்ஷன் ஈக்வலா இருந்தது. வித் டபுள் பெனிஃபிட்டோட! இன்னும் இருபதே நாள்ல ரிசல்ட் தெரிஞ்சுறும்” விஷமச் சிரிப்போடு கண்ணடித்து சொன்னவனை, முறைக்க முயன்று தோல்வியைத் தழுவினாள்.
“ஃபிராடு!” என்றவள் அவனையே கட்டிக்கொள்ள,
“எது பண்ணாலும் பக்காவா ஃப்ளான் பண்ணிப் பண்ணனும்ங்க அம்மணி! என்றான் புன்சிரிப்போடு.
“பசிக்குது… நைட்டு சாப்பிடவும் விடல, தூங்கவும்… “ என்றவள் வாக்கியம் முற்றுப் பெறாமல் வினையெச்சமாக மலர்ந்து சிரித்தான்.
“வா! தோசை மாவு இருக்குல்ல!”
“ம்ம்ம்… ஆனா அது புளிச்சிருக்குமே. ஃப்ரிட்ஜ்ல வைக்கலியே?”
“தெரியும். அது தெரிஞ்சு எப்படியும் ஃப்ரெஷ் மாவுதான் சீதா சித்தி கொடுத்து விட்டுருப்பாங்க. இப்ப தோசை ஊத்த கரெக்டா இருக்கும்!” என்று அவன் முன்னால் நடக்க,
“இனிமே இங்கதானா? இவ்ளோ பெரிய வீட்ல நாம மட்டும் எப்படி?” இங்கு வந்ததிலிருந்து அவளுக்குள் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்க,
“இங்க, நாம மட்டும் வர்றதா இருந்தா எப்பவோ வந்திருப்போம் மதி. பெரியப்பாவும், அப்பத்தாவும் பெரியம்மாவுக்காகத்தான் அங்க இருக்காங்க. அந்த வீடு பவித்ராவுக்கும், கிரிக்கும்தான் சொந்தம். எல்லாரும் இந்தவீட்ல பழைய மாதிரி ஒன்னா இருக்கணும்கறதுதான் என்னோட ஆசை.”
“நடக்குமா?”
“நடக்கணும்! பாக்கலாம், அந்த வீட்டுக்குப் போக ஒரு சம்பவம் நடந்த மாதிரி, இந்த வீட்டுக்கு வரவும் ஒரு சந்தர்ப்பம் வாய்க்காமலா போகும்!” என்றான் சிறு ஆயாசத்தோடு.
அந்த சந்தர்ப்பம் கூடிய விரைவில் அமையப் போகிறது. அதற்கு தன் உயிர் பணயமாகப் போகிறது என்பது அப்பொழுது அவன் அறியாதது.
பேசிக்கொண்டே வீட்டிற்குள் வந்துவிட்டனர். அடுப்படி சென்று பார்த்தாள். “எப்படீங்க! கரெக்டா சொன்னீங்க? மாவு இப்பதான் லேசா பொங்கி நிக்குது!”
“சீதா சித்தியப் பத்தி நல்லாத் தெரியும். அவங்களுக்கும் நம்மலப் பத்தி நல்லாத் தெரிஞ்சிருக்கும்” என்றவன் முகத்தில் சிரிப்பு தாண்டவமாடியது.
“தோசை ஊத்தவா?”
“நீ தோசை ஊத்த ஆரம்பிச்சா, எனக்கிருக்க பசிக்கு தோசை ஊத்தியே இன்னைக்கி டயர்ட் ஆகிறுவே. நானே ஊத்தறேன். நீ குழம்ப மட்டும் சூடு பண்ணு!” என்றவன் இருவருக்கும் தோசைகளை ஊற்றி அடுக்க ஆரம்பித்தான். அங்கேயே நின்று சாப்பிட ஆரம்பித்தவள், அவனுக்கும் சேர்த்தே ஊட்டிவிட்டாள்.
இருவரும் சாப்பிட்டு முடிய, “மதி… நீ கொஞ்ச நேரம் தூங்கி எந்திரி. மேற்கால தோப்புல காய் எறக்குறாங்க. ஒரு பார்வை பாத்துட்டு வர்றேன்.” என்று பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
“ரொம்ப பெரிய மனசுதான்! தூங்க எல்லாம் சொல்றீங்களே” என்று நொடித்தாள்.
“உனக்காக இல்ல. நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தாதானே, இன்னைக்கும் ஆப்போசிட் ரியாக்ஷன் டபுளா இருக்கும்!” வில்லங்கமாய்ச் சிரிக்க,
“போய்ட்டு வாங்க! பேசிக்கிறேன்!” என்றாள் மிரட்டல் தொனியில்.
பைக்கில் அமர்ந்தவன், தலையை மட்டும் ஆட்டி அருகே அழைத்தான். இவளும் என்னவோ என அருகே செல்ல, “ப்ளவுஸ் எங்க காயப்போட்ட. அரைமணி நேரம் கூட போடாத ப்ளவுஸ்க்கு எவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணின” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு, ரகசியமாகக் கேட்க, இவள் கையை ஓங்கும் முன் பைக் சீறிக்கொண்டு கிளம்பிவிட்டது. முகம் சிவக்க சென்றவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கட்டிலில் வந்து சோர்ந்து விழுந்தவள் புரண்டு கொண்டே இருக்க, இரவு முழுவதும் கண் விழித்தும், தூக்கம் வருவேனா என ஆட்டம் காட்டியது. நீண்ட இரவின் நினைவுகள் மேனியில் சிலிர்ப்பூட்டியது.
அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…
அவன் சென்ற பத்தே நிமிடத்தில் வெறுமை அலைக்கழிக்க, கைபேசியைக் கையில் எடுத்தாள்.
வண்டியை நிறுத்தும் முன் கைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தவன் புன்னகைத்தான்.
“சொல்லுங்க அம்மணி! என்ன, தூக்கம் வரலியா?” என்றவன் குரல் குழைந்தது.
“…”
“மதி…”
“…”
“கால் பண்ணிட்டுப் பேசாம இருந்தா என்னடீ அர்த்தம்!”
“…” சில நிமிடங்கள் அமைதியில் கரைய,
“கால் கட் பண்ணிறவா?” எனக் கேட்ட அடுத்த நொடி,
“மதனா!” அழைத்த குரலில் விரகம் தளும்பி வழிய,
“மேகி! டூ மினிட்ஸ்டீ!” வந்த வேகத்தில் புல்லட் யூ டர்ன் போட்டுத் திரும்பி புழுதி கிளப்பியது.
“என்னடா இவன்! வந்தான்… நின்னான்… கிளம்பிட்டான்… நம்மகிட்ட என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கூட கேக்கல!”
“இனிமேல் எல்லாம் அப்படித்தான்டா நரேன்!”
“அவன் பறந்து போனானே… நம்மை மறந்து போனானே…” மூவரும் கோரசாகப் பாட,
“அதொன்னுமில்லடா… கிளிக்கு ஜோடி கெடச்சுடுத்து… ஜோடியத் தேடி பறந்து போயிடுத்து!” என்று நரேன் கைகளை விரித்து நவரசம் பிழிய, அவன் கையில் ஒரு டம்ப்ளரை கொடுத்தான் அஜய்.
“இப்பதான் கரெக்டா இருக்கும். ப்ராபர்ட்டி மிஸ் ஆகுதா இல்லையா?” என்று மூவரும் சேர்ந்து சிரிக்க,
சங்கர், “அங்க என்னடா பண்றீங்க. வேலை செய்யாம!” என்று அதட்டி அழைத்தான்.
“குடும்பஸ்த்தன்கள் தொல்லை தாங்கலடா! சும்மா நொய்யு… நொய்யுனுட்டு… நாமலும் கூடிய சீக்கிரம் குடும்பஸ்த்தன் ஆகுறோம். வண்டிய யூ டர்ன் போட்டுத் திருப்பறோம்.” மூவரும் கையிலடித்து உறுதி மொழி எடுக்க, அஜய் யோசனையாக நின்றான்.
“என்னடா?”
“எங்கிட்டதான் பைக்கே இல்லையே?”
“அடப்பாவி… பொண்ணுக் கிடைக்கலையேனு கவலைப்படுவான்னு பாத்தா… வண்டி இல்லைனு கவலைப் படறானே. இவனெல்லாம் எந்த லிஸ்ட்டுல சேக்குறது?”
கேலியும், கலாட்டாவாகவும் மதன் இல்லை என்றாலும் வேலை தன்னால் நடந்தது.
தோப்பில் தங்கியிருந்த ஒரு வாரமும், இவர்களை சமைக்க வேண்டாமென, கார்மென்ட்ஸ் போகும் பொழுதே சாப்பாட்டை, ஜெகனிடம் சீதாலட்சுமி கொடுத்துவிட,
“எங்கெரகம்… சோத்துக் கூடை சுமக்குறேன். நல்லா வந்து வாக்கப்பட்டேன்!” ஜெகன் வழக்கம் போல் அலுத்துக்கொள்ள,
மதன், “இதே மாதிரி நாங்களும் மூனு வருஷத்துக்கு முன்னாடி சோத்துக் கூடை சுமந்ததா ஞாபகம்” என்றான்.
“சரி… சரி… செஞ்சதை சொல்லிக் காட்டுறது பெரிய மனுஷனுக்கு அழகில்ல!”
“அது எதிரணிக்கும் தெரியணும்!” வழக்கம் போல் இவர்கள் அலப்பறை தொடரும் போட்டது.
புதுமணத்தம்பதிகளாக தோப்பிற்கு வந்த கடமையை அவ்வப்பொழுது உண்டு, உறங்கி என செவ்வனே செய்தனர் இருவரும்.
